விஜய் கேட்டது சரி! திமுகவை எதிர்த்தால் பாஜக பி-டீம்னு சொல்லுவாங்க! தவெக விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நேற்று நடந்தது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து பேசியது தான்.

சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு குறித்து பல்வேறு அரசியல் யூகங்கள் எழுந்தன. தினகரனை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அழைத்து வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் அண்ணாமலை சென்றதாகவும் கூறப்பட்டது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அண்ணாமலை,“தமிழக அரசியல் நிலவரம் குறித்து தினகரனுடன் பேசியேன். அவர் கூட்டணிக்குள் வர வேண்டும் என்று கேட்டேன். ஆனால் ஏற்கிறாரா, மறுக்கிறாரா என்பது அவருடைய விருப்பம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. வேறு எந்த விஷயமும் பேசப்படவில்லை. இன்னும் தேர்தலுக்கு நேரம் உள்ளது, காத்திருப்போம்” என்று கூறினார்.

அதன்பின் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை நடிகர் விஜய் விமர்சித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை,“முதல்வரின் வெளிநாட்டு பயணத்தைப் பற்றி விஜய் கூறிய கருத்தை வரவேற்கிறேன். தமிழகத்தில் யாராவது விமர்சித்தாலே உடனே பாஜகவின் பி-டீம் என கூறுகின்றனர்.முதல்வரின் பயணத்தில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தற்போது முப்பதாயிரம் கோடி முதலீடு செய்யும் இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசின் நிறுவனங்கள். அதை சொல்வதில் திமுக அரசுக்கும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கும் ஏன் தயக்கம்? மத்திய அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனம் எனக் கூறி எத்தனை நாள் வண்டி ஓட்டப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, கடந்த சனிக்கிழமை நாகையில் மக்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,“முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாடுகளில் முதலீடா?” என்று கேள்வி எழுப்பி,“திமுக குடும்ப சொத்துகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனவா?” என்ற சந்தேகத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை – தினகரன் சந்திப்பு, அதோடு விஜயின் கருத்துக்கு அண்ணாமலை அளித்த வரவேற்பு, அடுத்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய கலவைகளை உருவாக்கும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay was right If you oppose DMK they will call you BJP B team Annamalai who spoke in support of Vijay has come out in support of him


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->