'பிரதமர் மோடி நாட்டை கைவிடுவது போன்று தெரிகிறது'; விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..! - Seithipunal
Seithipunal


கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக யாத்திரை நடத்தி வருகிறார். இதற்கு ஆதரவு தெரிவித்து விஜய் வசந்த் எம்.பி. பூத்துறை பகுதியில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

மக்களுக்கு வேலை கொடுக்காமல் மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்கிறார்கள். இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார். அத்துடன், அமெரிக்கா - இந்திய வர்த்தக ஒப்பந்தம், ராகுல்காந்தி கூறியது போல் கட்டாயத்தினால் ஏற்படுத்தபட்டது என்றுகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் வெளியுறவு துறைக்கு தெரியாமல் நடைபெற்றுள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொருள்களை அவர்கள் இறக்குமதி செய்தால் பூஜ்யம் சதவிகிதமும், நாம் ஏற்றுமதி செய்தால் 18 சதவிகிதமும் வரி விதிக்கப்படுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பல இடங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மோடியை பிரதமராக நாம் பார்கும் போது, அவர் நாட்டை கைவிடுவது போன்று தெரிகிறது என்று விமர்சித்துள்ளார்.மேலும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விவகாரத்தில், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் எங்களின் முடிவு என்று விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Vasanth MP says it seems like Prime Minister Modi is abandoning the country


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->