'ராகுல் காந்தி தேசிய பாதுகாப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது'; மத்திய அமைச்சர் வேண்டுகோள் ..!
Union Minister urges Rahul Gandhi not to use national security as a political weapon
கடந்த 02-ஆம் மற்றும் 11-ஆம் தேதிகளில் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும் ஒரு புத்தகத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி பல குற்றசாட்டுகளை முன்வைத்து மத்திய அரசை விமர்சித்தார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பேசியதற்காக ராகுல் காந்தி மீது உரிமை மீறல் அறிவிப்பு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அத்துடன், கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த போரின் போது நிலப்பரப்பை இழந்ததற்காக காங்கிரஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய அரசு எல்லை உள்கட்டமைப்பை மிக வலிமையாக மாற்றியுள்ளது என்றும் ஆளுங்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேசிய பாதுகாப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், வெறும் விளம்பரத்திற்காகப் பேசுவதை நிறுத்திவிட்டு ராகுல் காந்தி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவரது தேவையற்ற பேச்சுகள் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்றும், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், நாட்டின் பாதுகாப்பு குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவதைத் ராகுல் காந்தி தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Union Minister urges Rahul Gandhi not to use national security as a political weapon