நாளை காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு..!
Vijay to be sworn in as Tamil Nadu Chief Minister tomorrow morning at 11 AM
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையில் களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் அபார வெற்றிப் பெற்றது. ஆனாலும் ஆட்சியமைப்பதற்கான 118 என்ற அந்த அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் விஜய் முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இதனையடுத்து இன்று மாலை வரை நீடித்த இந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் ஆதரவு கொடுத்த நிலையில், தவெகவிற்கு சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆடிய காட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் லோக் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து, தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவு கடித்தை கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியனுக்கு விஜய் நேரில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், பெ.சண்முகம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அடுத்ததாக அவர் ல் ஐ.யூ.எம்.எல். அலுவலகத்திற்கு சென்று நன்றி தெரிவிக்கவுள்ளார்.
தற்போது தவெக ஆட்சியமைப்பதற்கான அதிகாரபூர்வமான பெரும்பான்மை கிடைத்துள்ளதால், நாளை நேரு விளையாட்டரங்கில் பதவி ஏற்கவுள்ளார். இந்த விழாவிற்கு 5000 பேருக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இந்த விழாவிற்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay to be sworn in as Tamil Nadu Chief Minister tomorrow morning at 11 AM