வெறும் 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா விஜய்? அப்டித்தான் வெயில் அடிக்கும் வேர்க்கும் ப்ரோ! திமுக, நாதக விமர்சனம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, சென்னை சிவானந்தா சாலையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் தலைவர் விஜய் சுமார் 3 நிமிடங்கள் கண்டன உரையாற்றினார். அதில், "அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் `சாரி’ கேட்டது தப்பில்லை. ஆனால், உங்கள் ஆட்சியில் போலீஸ் விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 24 பேரின் குடும்பத்தினரிடமும் நீங்கள் சாரி சொன்னீர்களா? அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், கண்டன ஆர்ப்பதட்டத்தில் வெறும் 3 நிமிடம் மட்டுமே விஜய் உரையாற்றியதை நாம் தமிழர், திமுக விமர்சித்துள்ளது. 

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் சார்பாக, அண்ணன் சீமான் அவர்கள் தலைமையில், தலைநகர் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள்  வள்ளுவர் கோட்டத்திலோ, சேப்பாக்கம் மைதானம் எதிரிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரிலோ நடக்கும்.

காலையில் 10, 10.30 மணி போலத் தொடங்கும் ஆர்ப்பாட்டங்கள் உச்சி வெயில் என்றாலும், 2 மணிவரைகூட நீண்டிருக்கிறது. அதில் அண்ணன் சீமான் அவர்களுக்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என்பதால், பேச்சாளர்கள் யாவருக்கும் நேர வரையறை செய்யப்படும். நேர நெருக்கடி காரணமாக 3 முதல் 5 நிமிடங்கள் வரைப் பேச்சாளர்களுக்கு அளிக்கப்படும். இருந்தபோதிலும், தங்களிடம் இருக்கும் கருத்துகளின் அடர்த்தி காரணமாகப் பேசக் கூடியவர்கள்  8 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்.

2015 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இன எழுச்சி மாநாட்டில் எல்லோருக்கும் தலா 3 நிமிடங்களே ஒதுக்கப்பட்டன. அந்த நேர வரையறைக்குள் தங்களது பேச்சைச் சுருக்கிக் கொண்டு, சொல்ல வந்த கருத்துகளைக் குறைத்துக் கொள்ள எல்லோரும் சிரமப்பட்டார்கள். இத்தனைக்கும் எல்லோரும் பல மேடைகளில் களம் கண்டவர்கள்தான். கூடுதலாகக் கிடைக்கும் ஒருசில நிமிடத் துளிகளில் இன்னும் நிறைய செய்திகளைக் கூறலாம் எனும் முனைப்பே இவற்றிற்குக் காரணம் எனலாம்.

இப்படியிருக்க, இங்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவரே 3.30 நிமிடத்தில் பேச்சைக் முடித்துக் கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்கிறார்.

அரசியல்படுத்தப்பட்ட தத்துவார்த்தரீதியிலான கூட்டத்திற்கும், அரசியலற்று தனிநபர் வழிபாடு செய்து, வெற்றுக்கூச்சலிடும் கும்பலுக்குமான வேறுபாடு. இவ்வளவுதான்!

Sorry ப்ரோ 
@actorvijay
 

3 மணி நேரம் பேச அனுமதி வாங்கி 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா?

என்ன பண்ண…
கேமரா, கேரவன், மேக்கப், சம்பளம் இல்லாம களத்துக்கு வந்தா அப்டித்தான் ப்ரோ …
வெயில் அடிக்கும் வேர்க்கும்…

What Bro… 
That’s wrong Bro…🤣🤣


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Tamilaga Vettri Kazhagam AjithKumar custodial death DMK NTK


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->