அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என்கிறார் ராகுல். அதற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்..? பாஜ எம்.பி. ரவிசங்கர் பிரசாத் விளாசல்..! - Seithipunal
Seithipunal


பீஹாரில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், இறந்து போனவர்கள் மற்றும்  இரண்டு இடத்தில் பெயர் உள்ளவர்கள் என 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையகம் நீக்கி,  புதிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1-இல் வெளியிட்டது.

இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி காங்கிரஸ் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட வாக்காளர் உரிமை யாத்திரை இன்று (செப்டம்பர் 1) பாட்னாவில் முடிவடைந்தது. அப்போது பேசிய ராகுல் ஓட்டுத்திருட்டு என்ற அணுகுண்டுக்கு பிறகு, ஹைட்ரஜன் குண்டு வரப்போகிறது என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ராகுலின் இந்த பேச்சு, பொறுப்பற்றது என்று பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது:

ராகுல் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் பாராளுமன்றத்தில் உள்ளே மற்றும் வெளியேஅவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும். இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என்கிறார். அதற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ராகுல் ஏன் அவரை இப்படி தன்னையே இழிவுபடுத்திக் கொள்கிறார் என்றும், ராகுல் பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  அவர் மேற்கொண்ட யாத்திரையில், ராகுல் எப்போதும் காரில் முன்பக்கத்தில் இருந்தார், தேஜஸ்வி யாதவ் அவருக்குப் பின்னால் நின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாட்னாவில் 02 எம்.பி.க்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் நான், மற்றவர் மிசா பாரதி. அவர் எங்கும் காணப்படவில்லை என்றும், பீஹாரில் தேஜஸ்வி யாதவ் ஏன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.? காங்கிரசுக்கு இங்கு வாக்கு இல்லை என்று ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MP Ravi Shankar Prasad criticizes Rahul Gandhi speech


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->