விஜய் சேதுபதி மகள் விவகாரத்தில் திடீர் திருப்பம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றவாளி கண்டுபிடிப்பு!  - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என, தமிழகத்தில் கடும் எதிர் கிளம்பியது. இதனை அறிந்த முத்தையா முரளிதரன் தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

விஜய் சேதுபதியும் "நன்றி வணக்கம்" என ட்வீட் செய்து படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே, விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் வன்கொடுமை மிரட்டலை ஒரு நபர் விடுக்க, அந்த மர்ம நபருக்கு கண்டனம், எதிர்ப்பு தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி குடும்பம் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் இலங்கையில் இருப்பது கண்டுபிடித்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay sethupathi daughter issue new ino for that culprit


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->