அமைச்சரவை விரிவாக்கத்தில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்? திமுக வாக்கு வங்கிக்கே நேரடி சவால்! இனி திமுக மீள்வதெல்லாம் ரொம்ப கஷ்டம்!
Vijay masterstroke in cabinet expansion A direct challenge to DMK vote bank It will be very difficult for DMK to recover from now on
தமிழக அரசியலில் இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கம் மிகப்பெரிய அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, இதுவரை திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியாக கருதப்பட்ட சமூகங்களை குறிவைத்து முதலமைச்சர் விஜய் தனது புதிய அமைச்சரவை அமைப்பை வடிவமைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழக அரசியலில் தலித், முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பெண்கள் வாக்குகள் நீண்ட காலமாக திமுகவின் முக்கிய ஆதரவுத் தளமாக பார்க்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது விஜய் அறிவித்துள்ள அமைச்சரவை பட்டியலில் இந்த சமூகங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பது, அரசியல் ரீதியாக பெரிய செய்தியாக மாறியுள்ளது.
புதிய அமைச்சரவை பட்டியலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒரு முஸ்லிம் அமைச்சரும் இடம்பெற்றுள்ளார். கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை நீண்ட கால அடிப்படையில் உறுதிப்படுத்தும் முயற்சியில் விஜய் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பெண்கள் வாக்குகளை குறிவைக்கும் வகையிலும் இந்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. சி.விஜயலட்சுமி, கே.ஜெகதீஸ்வரி உள்ளிட்ட 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது, பெண்கள் மத்தியில் தவெக ஆதரவை மேலும் வலுப்படுத்தும் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், கொங்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் திமுக – அதிமுக மோதலின் முக்கிய மையமாக இருக்கும் அந்தப் பகுதியில் இருந்து 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த விஜய் முயற்சி செய்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், விரைவில் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும், விசிக சார்பில் ஒரு தலித் அமைச்சருக்கும் இடமளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே தற்போது திமுகவுக்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை திமுக கூட்டணிக்குள் நிலைநிறுத்திய முக்கிய கூட்டணி கட்சிகள் ஐயூஎம்எல் மற்றும் விசிக தான். தற்போது அந்தக் கட்சிகளே தவெக அரசில் பங்கேற்கும் சூழல் உருவாகி இருப்பது, திமுகவின் அடித்தள வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாவது, “திமுகவின் பாரம்பரிய சமூக கூட்டணியை உடைத்து, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கும் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க விஜய் முயற்சி செய்கிறார்” என்பதாகும்.
இதனால் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழக அரசியல் கணக்குகள் முற்றிலும் மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக உட்கட்சிப் பிரச்சினைகளால் பலவீனமடைந்துள்ள நிலையில், திமுகவின் முக்கிய வாக்கு வங்கிகளையும் குறிவைத்து விஜய் நகர்ந்து வருவது தமிழக அரசியலில் புதிய சக்தி சமநிலையை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
English Summary
Vijay masterstroke in cabinet expansion A direct challenge to DMK vote bank It will be very difficult for DMK to recover from now on