சிஎஸ்கே அணியை 89 ரன்களில் குஜிலிமஸ்து செய்த குஜராத்; சோகத்தில் சென்னை ரசிகர்கள்..!
Gujarat defeats CSK by 89 runs
19 வது ஐபிஎல் தொடரின் 66-வது லீக் ஆட்டம் இன்று சென்னை மற்றும் குஜராத்தை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த 2026 தொடரில் ஆர்சிபி, குஜராத் மற்றும் ஹைதராபாத் முதலிய 03 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன.
மீதமுள்ள கடைசி 01 இடத்துக்கு சிஎஸ்கே, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நீடித்த நிலையில், முக்கியமான போட்டியில் இன்று குஜராத்தை எதிர்கொண்டு சென்னை அணி விளையாடியது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, குஜராத் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 84, சுப்மன் கில் 64 ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பட்லர் 57 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 04 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை குவித்தது.

230 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் நம்பிக்கை வீரர் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே 0 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்துவந்த உர்வில் பட்டேலும் 0 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ருதுராஜ் 16, கார்திக் சர்மா 19 மற்றும் மேத்யூ சார்ட் 24 ரன்களிலும் அவுட்டாக 63 ரன்னுக்கே 05 விக்கெட்டை இழந்து சிஎஸ்கே மீண்டும் சொதப்பியது.
இந்த தொடர் முழுவதுமே சொதப்பிய பிறேவிஸ் 08 ரன்களிலும், அதிகபட்சமாகி சிவம் தூபே 47 ரன்களிலும், கம்போஜ் 19 ரன்களிலும், நூர் அஹமட் 01 ரன் என மொத்தமாக சொதப்பிய நிலையில் 13.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 140 ரன்களுக்குள் சுருண்டது.
குஜராத் அணி சார்பில், மொஹமட் சிராஜ், றபாடா, ரசித் கான் தலா 03 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். போட்டியின் ஆட்டநாயகனாக சிராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
Gujarat defeats CSK by 89 runs