ஆட்சி அமைக்க இன்றிரவே அழைப்பு விடுக்க வாய்ப்பு; நாளை பி.ப 03:15-க்கு விஜய் பதவியேற்பு..?
Vijay likely to be invited to form the government as early as tonight
தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையில் களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் அபார வெற்றிப் பெற்று தனிப்பெரும் காட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான 118 என்ற அந்த அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் விஜய் முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இதனையடுத்து இன்று மாலை வரை நீடித்த இந்த இழுபறி நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் தவெகவிற்கு முதலாவதாக ஆதரவு கொடுத்த நிலையில், தவெகவிற்கு சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தவெக தலைவர் விஜய் லோக் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து, தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவு கடித்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். அதன்படி இன்றிரவே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது.
இதனையடுத்து நாளை மாலை 03;00 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவிற்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Vijay likely to be invited to form the government as early as tonight