விஜய் அரசின் முதல் சட்டமன்றத் திருவிழா...! நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - புதிய சரித்திரம் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை உருவாக்கிய இந்த பதவியேற்பு விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் துணையுடன், த.வெ.க. சட்டப்பேரவையில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 உறுப்பினர்களின் பலத்தை எட்டியுள்ளது.

இதன் மூலம் விஜய் தலைமையிலான அரசு தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.இதனைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவுள்ளது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது.

புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தைக் காண அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay first legislative festival Tamil Nadu Legislative Assembly meet tomorrow new history begins


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->