விஜய் பித்தலாட்டம் செய்தார்! -கரூர் சம்பவத்தை குறிவைத்து வைகோ கடும் விமர்சனம்...!
Vijay acted out of anger Vaiko harshly criticized for targeting Karur incident
மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, பல அரசியல் சர்ச்சைகளை கிளப்பும் வகையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.அவர் கூறியதாவது,"கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் யாரும் நினைக்காத பித்தலாட்டத்தை விஜய் செய்துள்ளார். அந்த சம்பவத்துக்குப் பின், திருச்சியில் தங்காமல் நேராக சென்னைக்கு பறந்துவிட்டார்.
முதல்-அமைச்சர் 'இது அரசியலுக்குரிய விஷயம் அல்ல' என்று கூறியபோதும், விஜய் அதையே அரசியல் பேசாக் கருவியாக்கியுள்ளார்” என்றார்.அதனைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டின் கூட்டணி அரசியல் குறித்து பேசிய வைகோ,“அந்தக் காலத்தில் செய்த தவறுகளின் விளைவுதான் இன்று ஓ.பன்னீர்செல்வம் அனுபவிக்கிறார்.

அப்போது கூட்டணி தொடர்வதா என்பதில் சந்தேகம் எழுந்தபோது, அதிமுக சார்பாக செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் என்னைச் சந்தித்தனர். அவர்களிடம், ‘எத்தனை தொகுதிகளை அளிக்க முடிவு செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் ‘12 தொகுதிதான்’ என்றார்கள்.அதை நான் ஏற்க மறுத்தேன். ‘இதற்கும் மேல் தர முடியுமா? உங்கள் பொதுச் செயலாளர் ஒப்புக்கொண்டால் கூட்டணியை உறுதிசெய்யலாம்,’ என்றேன். அதற்கு அவர்கள் ‘அப்படியே செய்வோம்’ என்று சொல்லிச் சென்றனர்.
ஆனால், பின்னர் அதிமுக தலைவரிடம் சென்று ‘வைகோ கூட்டணியில் இருக்க விரும்பவில்லை; அவர் சொல்லும் தொகுதியை நமக்கால் தர முடியாது’ என்று பொய்யுரைத்தார்கள்.பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது," ஜெயலலிதா 15 தொகுதி, மேலும் ஒரு ராஜ்யசபா இடம் வழங்கத் தயாராக இருந்தாராம்” என்று வைகோ கூறினார்.
English Summary
Vijay acted out of anger Vaiko harshly criticized for targeting Karur incident