பணம் மோசடி வழக்கில் விசிக பெண் நிர்வாகி கைது!! - Seithipunal
Seithipunal


சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த விசிக பெண் நிர்வாகி சென்னையில் கைது!!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக இருந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அதிகாரியாகவும் பணியாற்றி வருவதாக பலரிடம் கூறி ஏமாற்றி வந்துள்ளார். 

இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிய இவரிடம் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காயத்ரி மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காயத்ரியின் கூட்டாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்த நிலையில் காயத்ரி மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதற்கிடையே அவர் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை அடுத்து சென்னையில் உள்ள ஓட்டலில் தலைமறைவாக இருந்த காயத்ரியை சேலம் போலீசார் அதிரடியாக கைது செய்ததோடு அவரிடமிருந்து சொகுசு கார்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட காயத்ரியை சேலம் அழைத்துச் சென்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK woman executive arrested in money fraud case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->