புதுச்சேரி : வி.சி.க.வின் மத நல்லிணக்க பேரணிக்கு அனுமதி.! நாளை தொடங்கவுள்ளது.!
VCK rally permission in Pudhuchery
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வரும் மாதம் 2ம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும், வி.சி.க உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்கும் சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியான நாளை ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கும், காங்கிரஸ், திமுக, வி.சிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்கும் மத நல்லிணக்க பேரணிக்கும் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் நடக்கவுள்ள அந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த பேரணி அண்ணாசாலை மற்றும் காமராஜ் சாலையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் வேறு எங்கும் நடத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary
VCK rally permission in Pudhuchery