பெருகும் ஆதரவு... லிஸ்ட் போடும் அதிமுக... குஷியில் ஈபிஎஸ்.!!
Various small parties and community support aiadmk
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கிட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிலுவையில் உள்ள நிலையில் மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
அதே வேளையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தங்கள் தேர்தல் தொகுதி பங்கீடு இப்படித்தான் பேச்சு வார்த்தையில் முழு வீட்டில் ஈடுபட்டு வருகிறது. இது ஒரு உறவு இருக்க அதமுகவுக்கு சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு பெருகி வருவதாக அதிமுக தரப்பு கூறி வருகிறது.

அந்த வகையில் அகில இந்திய பார்வர்டு உள்ள கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்ததோடு தொகுதி பங்கீடு குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு தமிழரசன் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததோடு தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சு வர்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் தலைமையிலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று அகில இந்திய வன்னிய குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமையிலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சியின் அகில இந்திய தலைவர் குமரத் தேசிகன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் அருள்தாஸ் தலைமையிலான கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுக்கு சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு பெருகி உள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருப்பதால் கூடிய விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Various small parties and community support aiadmk