வானதி ஸ்ரீனிவாசன் உடையால், சட்டப்பேரவையில் சிரிப்பலை.! "தெரியாம போட்டுட்டேன் விடுங்கப்பா." என ஆதங்கம்.!  - Seithipunal
Seithipunal


குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், இவ்வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி காங்கிரஸ் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்கள் செய்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இத்தகைய நிலையில், இன்று  தமிழக சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து பேரவையில் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். 

அப்போது, கோவை பாஜக எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசனும் இயல்பாக கருப்பு நிற புடவை அணிந்து கொண்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அப்போது, அவரை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு வானதி சீனிவாசன் சிரித்துக்கொண்டே, " எப்பா.. தெரியாம போட்டுட்டேன் விடுங்கப்பா." என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார். இதன் காரணமாக அங்கே சற்று நேரம் சிரிப்பலையும், ஆரவாரமும் ஏற்ப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanadhi Srinivasan wearing black saree In assembly makes Laughs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->