ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த வெற்றி தான் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா விளையாட்டு மைதானத்தில் தளபதி கோப்பை மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,கேலோ இந்தியா போட்டியில் தமிழக வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே, தான் கேலோ போட்டியை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். தமிழகத்திற்கு கேலோ இந்தியா மூலம் நிதி குறைவாக வந்துள்ளது. போட்டியை நடத்த அனுமதி கொடுத்தால் நிதி அதிகமாக கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.

மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் எனக் கூறினார். மேலும் அதிமுகவின் பின்னடைவுக்கு குறித்த கேள்விக்கு ஒருவரின் வெற்றியை தான் நான் பார்க்கிறேன் மற்றவர்களின் தோல்வி குறித்து பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanithi Stalin speech about erode by election results


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->