எதை குறைக்க சொன்னா.. எதை குறைச்சிட்டு இருக்கீங்க! உதயநிதிகக்கு வந்த சந்தேகம்!  - Seithipunal
Seithipunal


புதியதாக தமிழகத்தில் விடப்பட்ட வந்தே பாரத் ரயிலினால், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு பயணிகளுக்கு சிரமத்தைக் கொடுத்துள்ளது. 

இது குறித்து, 'குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, செயல்பாட்டில் இருக்கும் பிற ரயில்களின் வேகத்தை அல்ல' என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் #VandheBharat ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர்.

குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi tweet about vanthe bharath train


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->