'உதயநிதிக்குக் கொஞ்சம் கூட நாவடக்கம் இல்லை'...! - அமைச்சர் ஆனந்த் காரசார தாக்குதல்...! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் ஆட்சியை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கடுமையாக கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கு தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.ஆடிப்பெருக்கு நாளான இன்று காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டிய சூழல் நிலவ வேண்டிய நிலையில், டெல்டா மாவட்டங்கள் தண்ணீரின்றி வறண்டுபோயுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், "தி.மு.க. ஆட்சி தொடர்ந்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்குமா?" என்று கேள்வி எழுப்பினார்.

நிர்வாகத் திறனின்மையே தமிழ்நாட்டை இந்த நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கர்நாடக முதலமைச்சரை சந்திப்பது ஒருபுறம் இருக்கட்டும், முதலில் தமிழ்நாட்டு விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் வேதனையை முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தாரா என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் பா.ஜ.க. குறித்து ஒரு வார்த்தைகூட பேசத் தயங்குகிறார் என்றும், கர்நாடக காங்கிரஸ் அரசை விமர்சிக்கக்கூடிய அரசியல் துணிவு அவருக்கு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், த.வெ.க. பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த், தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்பின் மாண்பையும் மரபையும் உணராமல், எல்லை மீறிய வார்த்தைகளால் பேசுவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல. தன் குடும்பத்தில் உயரிய பதவிகளை வகித்தவர்களின் அனுபவம் இருந்தும், முதல்-அமைச்சர் பதவிக்குரிய மரியாதை மற்றும் கண்ணியத்தை உணராத வகையில் ஒருவர் செயல்படுவது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "அரசியல் மேடையில் பேசுபவர்களுக்கு அவை நாகரிகமும் நாவடக்கமும் இன்றியமையாதவை. அவற்றை மீறி தனிநபர் இழிவுகளை முன்வைப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை மீறி பேசுபவர்கள் அதற்கான பதிலை மக்களிடமே பெற வேண்டிய சூழல் உருவாகும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, "நாகரிகமான அணுகுமுறையையும், கண்ணியமான அரசியல் பண்பையும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த தலைவர் தளபதியின் வழிகாட்டுதலே எங்களை அமைதியாக இருக்கச் செய்கிறது. இல்லையெனில், இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளிக்க எங்களுக்கு தயக்கம் இல்லை.

அறிஞர் அண்ணா கூறிய ‘வசவாளர்கள் வாழ்க’ என்ற உயர்ந்த அரசியல் பண்பை நினைவுகூர முடியும்; ஆனால் தரம் தாழ்ந்த அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்; உரிய நேரத்தில் அவர்களே தக்க தீர்ப்பை வழங்குவார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது" என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi doesnt even little bit of self restraint Minister Anand verbal attack


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->