ஜல்லிக்கட்டு காளை வளர்த்தால் மாதம் ரூ.1,000... திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு..?? ஆர்.பி உதயகுமார் கேள்வி..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற கண்ணனுக்கு கார் பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று வழங்கினார். இதற்காக அலங்காநல்லூருக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது "ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரர்களுக்கு கார் பரிசு வழங்குகிற பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை சேரும். 

கடந்த 2021ல் வெற்றி பெற்ற வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததே இதற்கு காரணம். தற்பொழுது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த வீரருக்கு பரிசு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ஓர் அரங்குக்குள் அடக்கி விடுவார்களோ என்ற அச்சம் இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடம் வனப்பகுதியையும், நீர் நிலையையும் ஒட்டி இருப்பதால் அதில் எப்படி மைதானம் அமைக்க முடியும். வனப்பகுதிக்கு பாதிப்பில்லாமல் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்போம் என அரசு தரப்பில் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை எப்போதுதான் நிறைவேற்ற போகிறார்கள்..?? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udayakumar asked Dmk promise incentive for jallikattu bull breeders


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->