2026 ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா விஜய்? வைரலாகும் போஸ்டர்!
TVK Viujay Sri Rangam Election 2026
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறுகிய காலத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் முதல் மாநாடு அரசியல் வட்டங்களை அதிர வைத்த நிலையில், அண்மையில் அதிமுக, திமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தது மேலும் அக்கட்சியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதனிடையே, கடலூர், மதுரை போன்ற மாவட்டங்களிலும் விஜய் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜூன் 22ல் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டியிடவிருக்கிறார் என ஊகங்கள் உச்சத்தைத் தொட்டுள்ளன.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், புத்தூர் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் “மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே வாழ்க பல்லாண்டு” என இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து அக்கட்சித் தொண்டர்கள், “மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். விஜய் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்” என உறுதியுடன் கூறுகின்றனர்.
எனினும், அவர் எந்த தொகுதியைத் தேர்வு செய்கிறார் என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
English Summary
TVK Viujay Sri Rangam Election 2026