திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுப்பு!
TVK Vijay Trichy Election Campaign 2025 TN Police
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட நான்கு இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், விஜயின் தொண்டர்களைச் சந்தித்து உரையாற்றும் நிகழ்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையம் மாற்றாக, திருச்சி மரக்கடை மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் பிரசார கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், திருச்சியைத் தொடர்ந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TVK Vijay Trichy Election Campaign 2025 TN Police