சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் அலுவலகத்திற்கு நிர்மல்குமார் நேரடி விஜயம்; தவெகவிற்கு ஆதரவு கிடைக்குமா..?
TVK Nirmal Kumar Pays Direct Visit to CPI and CPM Offices
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு எதிர்நோக்கியுள்ளது.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டனில் இருந்து 05 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவளித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், தவெக பெரும்பான்மைக்கு இன்னும் 06 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அளித்துள்ளதோடு, தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி வருகிறது. எனினும், பெரும்பான்மையை நிரூபித்த பிறகு, ஆட்சி அழைக்கப்படுவீர்கள் என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தசூழலில் மற்றக் கட்சிகளின் ஆதரவை பெறும் நோக்கில், தவெக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்ற தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியனைச் சந்தித்து ஆதரவு கோரினார். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமயகத்திற்கு சென்ற அவர், அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ. சண்முகத்தை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். இந்த இரு கட்சிகளும் ஆதரவு தரும் பட்சத்தில் தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 117-ஆக உயரும். இடதுசாரிகளின் முடிவிற்குப் பிறகே தாங்கள் முடிவெடுக்க உள்ளதாக விசிக தெரிவித்திருக்கும் நிலையில், அக்கட்சிகளின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக சிபிஐ அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம். ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆளுநர் சட்டபடி முடிவெடுத்து ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்புவதாகவும், அவரின் முடிவிற்கு பிறகு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Nirmal Kumar Pays Direct Visit to CPI and CPM Offices