தமிழக அரசின் தலைமை கொறடாவாக தவெகவின் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்..! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆன்னாலு, ஆட்சியமைக்க தேவையான 118 என்று பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்  தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சட்டசமயில் பதவி பிரமாணம், முதல் கன்னி பேச்சு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை, எதிர்க்கட்சித் தலைவர்களைச் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றது, சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரை நியமித்தது, முக்கியமாக கோவில், பள்ளிக்கூடம், பேருந்து நியாயம் அருகில் உள்ள குறிப்பிட்ட டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டமை, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை தனது அரசியல் சிறப்புப் பணி அலுவலராக (OSD) அரசாணை பிறப்பித்தமை இலங்கையி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 06 தமிழ்நாடு மீனவர்களை மீட்க வெளியுறவுத் துறைக்கு கடிதம் என அதிரடியான முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புகளும், நடவடிக்கைகளும் தற்போது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தவெக அரசின் கொறடா நியமனமும் கவனம் பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகராக தேர்வு செய்த முதலமைச்சர் விஜய், தனது கட்சியின் முதல்முறை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. சபரிநாதனை அரசு கொறடாவாக நியமித்துள்ளார்.

விருகம்பாக்கத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் வந்த சபரிநாதன் தற்போது அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் அமைச்சருக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய்யின் முன்னாள் கார் ஓட்டுநராகவும், உதவியாளராகவும் இருந்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகனான சபரிநாதனுக்கு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி, தேர்தலில் விருகம்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK MLA Sabarinathan Appointed as the Chief Government Whip of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->