ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது... தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் கண்டனம்!
tvk condemn for delhi congress rahulgandhi arrest
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் இன்று போராட்டம் நடத்தினர்.
இதில், ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.
SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
English Summary
tvk condemn for delhi congress rahulgandhi arrest