'லிவ்-இன்' உறவு, 03 வயதில் குழந்தை இருப்பதை மறைத்து நிச்சயித்த பெண்ணுடன் உடலுறவு; மன்னிக்க முடியாத குற்றம்; கேரளா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
The Kerala High Court has delivered a strong ruling stating that engaging in sexual intercourse with a woman to whom one is betrothed while concealing the existence of a live in relationship and a child constitutes a crime
வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் காதல் உறவையும், குழந்தையையும் மறைத்து, நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உடலுறவு கொள்வது பிஎன்எஸ் சட்டப்படி கடும் குற்றம் என கேரளா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், உதயன் என்பவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இதற்காக அப்பெண்ணின் குடும்பத்தினர் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து திருமண நிச்சயதார்த்த விழாவை விமரிசையாக நடத்தியுள்ளனர்.
உதயனுடன் திருமணம் உறுதியான நம்பிக்கையில் இருந்த அந்தப் பெண்ணை, நைசாகப் பேசி வயநாடு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளார். அத்துடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், திருமணம் செய்துகொள்ள போகின்றோம் தானே என்று, ஆசை காட்டி, அப்பெண்ணை வற்புறுத்தி அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில், உதயனுக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் ‘லிவ்-இன்’ ஜோடியாக சேர்ந்து வாழ்ந்து, அவர்களுக்கு 03 வயதில் ஒரு குழந்தை இருப்ப அப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கோழிக்கோடு பேரோக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் மோசடி, பிஎன்எஸ் 69 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்ப உதயன் விடுத்த முன்ஜாமீன் மனு கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பத்ருதீன் முன்னிலையில், தான் அப்பெண்ணை திருமணம் செய்ய இன்னமும் தயாராக இருப்பதால் பிஎன்எஸ் பிரிவு 69 தன் மீது பொருந்தாது என உதயன் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதனை திட்டவட்டமாக நிராகரித்த நீதிபதி, 'முந்தைய லிவ்-இன் ரகசிய உறவையும், குழந்தையையும் திட்டமிட்டு மறைத்துவிட்டு, நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் உடலுறவுக்கு சம்மதம் பெறுவது நயவஞ்சகமான மோசடி செயலாகும். பொய்யான வாக்குறுதி அளித்தோ அல்லது ஏமாற்று வழிகளிலோ பெண்ணின் சம்மதத்தைப் பெற்று நடத்தப்படும் உடலுறவு பிஎன்எஸ் 69-வது பிரிவின் கீழ் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
திருமணம் ஆகாதவர் என்ற தவறான தகவலின் பேரிலேயே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.'' என்று தெரிவித்தார்.
அத்துடன், ''வஞ்சகமான முறையில் அந்தப் பெண்ணை ஏமாற்றி உடலுறவு கொண்டிருப்பது முதல் நோக்கிலேயே உறுதியாகியுள்ளதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது.'' என்று கூறி அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார். அத்துடன் பெண்ணை ஏமாற்றிய அந்த நபர், உடனடியாக விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The Kerala High Court has delivered a strong ruling stating that engaging in sexual intercourse with a woman to whom one is betrothed while concealing the existence of a live in relationship and a child constitutes a crime