சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்: பயணியிடம் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சிங்கப்பூர் செல்லும் ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது அந்த விமானத்தில் சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த அந்நாட்டின் குடியுரிமை பெற்ற இந்தியரான சுமார் 38 வயது ஆண் பயணியின் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலமாக சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த கைப்பைக்குள் வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து, அந்த கைப்பையை திறந்து சோதனை செய்துள்ளனர். அதில், ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆஸ்திரேலிய பணம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் ஆஸ்திரேலியாவில் சென்னைக்கு வந்தபோது அப்பணத்தை கொண்டு வந்ததாகவும், மீண்டும் அப்பணத்தை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.

எனினும், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வரும்போது, அப்பணத்தை கொண்டு வருவதாக சென்னை விமான நிலையத்தில் டிக்ளேர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை விமானப் பயணி எடுத்து செல்வதை அனுமதிக்க முடியாது என்று குறித்த பயணியிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவரது சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்துள்ளனர். அத்துடன், அவர் வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆஸ்திரேலிய நாட்டு பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதன் பின்னர் மேல் நடவடிக்கைக்காக, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் மற்றும் பிடிபட்ட ஆண் பயணியையும் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதோடு, அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Foreign currency worth Rs 20 lakh seized at Chennai airport while being smuggled to Singapore


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->