ராகுலுக்கு வாக்குரிமை போய்விடுமோ என்று அச்சம்; நயினார் நாகேந்திரன் தாக்கு..! - Seithipunal
Seithipunal


''சோனியா இத்தாலி நாட்டுக்காரர் என்பதால், தனது வாக்குரிமை போய்விடுமோ என்று ராகுல் அச்சம் கொள்கிறார்.''என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார். அவர் எதை நினைத்து இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை என்றும், காங்கிரஸ் கட்சி ஆளும் கேரளாவில் எஸ்ஐஆர் குளறுபடி எதுவும் இல்லை என்றும், அம்மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, எஸ்ஐஆர் வந்ததால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்கும் போது, பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எஸ்ஐஆர் குளறுபடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் தாய் இத்தாலி நாட்டுக்காரர் என்பதால், தனது வாக்குரிமை போய்விடுமோ என்று ராகுல் அச்சம் கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவெக அரசு மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது என்றும், கடந்த தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கான அவசியம் தற்போது வந்துள்ளதற்கு காரணம், அவருடைய மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் நல்ல தீர்ப்பைப் பொறுத்து, தமிழகத்தின் எதிர்காலம் இருக்கும் என்றும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்போகிறார்கள் என தெரியவில்லை. கடந்த கால அரசு என்ன செய்ததோ, அதையே தான் தற்போதைய அரசும் செய்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran lashes out expressing fear that Rahul might lose his voting rights


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->