டெல்லியில் பேரதிர்ச்சி; நான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து: கர்ப்பிணி பெண், 02 குழந்தைகள் உயிரிழப்பு; 08 பேர் காயம்..!
Three people died in the collapse of a four story building in Delhi
தலைநகர் டெல்லியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு, 08 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வடகிழக்கு பகுதியில் உள்ள நியூ சீமாபுரி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 05 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்துள்ளதாவது;
மதியம் 03 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடு அது. தகவல் கிடைத்தும் தேசிய பேரிடர் மீட்பு படை, காவல் துறை, தீயணைப்பு படையினரிடம் தெரிவித்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி அருகில் இருந்த கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி நடந்துள்ளது. அதன் தாக்கம் இடிந்து விழுந்த கட்டிடத்தை வலுவிழக்க செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று வடகிழக்கு டெல்லியின் மாவட்ட நீதித்துறை நடுவர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகே மேலும் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாக களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், உத்தராகண்ட் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதையடுத்து அன்று இரவே இடிந்து விழுந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்த நிலையில், கட்டிடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததாக டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளதாகவும், 08 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Three people died in the collapse of a four story building in Delhi