முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செம்மலை உள்ளிட்ட மாற்றுக்கட்சித் தலைவர்கள் !
TVK Chief Vijay Campaigns in Dharapuram By-Election Former AIADMK Leader Semmalai Joins Party
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வதற்காகத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாகத் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு பிற்பகல் 3.40 மணிக்கு வந்தடைந்தார். கோவை முதல் தாராபுரம் வரையிலான வழியெங்கிலும் திரண்டிருந்த திரளான பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தவெகவில் இணைந்த செம்மலை & தலைவர்கள் வரவேற்பு:
பிரசாரக் கூட்ட மேடைக்கு வந்தடைந்த தவெக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வின் போது, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய மூத்த தலைவர் செம்மலைக்குக் கட்சித் துண்டு அணிவித்து அவரைத் தவெகவில் விஜய் முறைப்படி இணைத்துக் கொண்டார்.
மேலும், அமமுக சார்பில் வெற்றி பெற்ற மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜயபாஸ்கர்கள் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சி முக்கியத் தலைவர்களும் பிரசார மேடையில் பங்கேற்று விஜயை நேரில் வரவேற்றனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் களம், தவெகவின் இத்தகைய தீவிரப் பிரசாரம் மற்றும் மாற்றுக்கட்சி முக்கிய நிர்வாகிகளின் தொடர் சேர்க்கை காரணமாகத் தற்போது தேர்தல் களத்தில் பெரும் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TVK Chief Vijay Campaigns in Dharapuram By-Election Former AIADMK Leader Semmalai Joins Party