கேடுகெட்டத்தனம்.... நாவை அடக்கிக் கொள்ளுங்கள்... இல்லையேல், அடக்கப் படுவீர்கள்! அதிமுக கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கேடுகெட்டத்தனம் என்றால் என்ன தெரியுமா CTR நிர்மல்குமார்? தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று சொல்வது கேடுகெட்டத்தனம்.

தமிழ்நாட்டின் மின்வெட்டைப் பற்றிக் கேட்டால், தலையில் Turban மாட்டாத குறையாக, “பஞ்சாப்பிலே பதினாலூ மணி நேரம் மின்வெட்டு இருக்கூ” என்று நிர்மல் சிங்-ஆக மாறுவது கேடுகெட்டத்தனம்.

மின் வெட்டை ஒரு சாக்காக வைத்து கொள்ளை விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்து, அதில் கமிஷன் பேசுவது கேடுகெட்டத்தனம்.

மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வந்த மக்களை கோபுர தரிசனம் கூட கிடைக்க விடமால் அவதியுற செய்வது கேடுகெட்டத்தனம்.

குடமுழுக்குக்கான பாஸ்களை Black Ticket போல விற்பது கேடுகெட்டத்தனம்.

ராமராஜ் ஷோரூமில் கூட இல்லாத அளவிற்கு இந்தியாவில் இருக்கின்ற, இன்னும் வரப்போகின்ற அனைத்து கட்சிகளின் கரை வேட்டியையும் தனது பீரோவில் தயாராக வைத்துள்ள நிர்மல் குமாரெல்லாம் கேடுகெட்ட என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?

உங்கள் பீரோவில் இன்னும் பத்திரமாக இருக்கும் அந்த அண்ணா திமுக வேட்டியைப் பாருங்கள் மிஸ்டர் மினிஸ்டர்…. #எடப்பாடியார்_எனும்_ஆளும என்று Hashtag போட்டு #EDAPPADIYAARFOREVER என்று Cover Pic வைத்து எடப்பாடியார் வீட்டு வாசலில் காத்திருந்த காலமெல்லாம் நினைவில் இருக்கட்டும்!

நாவை அடக்கிக் கொள்ளுங்கள். 
இல்லையேல், அடக்கப் படுவீர்கள்!

#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK IT WING CONDEMN TO TVK MINISTER CTR NIRMAL KUMAR


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->