வித்யா ராம்ராஜ் பதக்கம் வெல்ல திமுக அரசு தான் காரணம்... உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் பகிர்ந்த செய்தி@
dmk udhay wish asia game 2026 medal winner vidhya ramraj
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கழகத்தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வித்யா ராமராஜின் விளையாட்டுத் திறமையை அங்கீகரித்து, அவருக்கு ELITE பிரிவின் மூலமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) மூலமும் தேவையான உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மேலும், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள அபினயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி ஆகிய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகள், நமது விளையாட்டு வீரர்கள் இத்தகைய உயரங்களை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வகையில், தற்போதைய அரசு தொடர்ந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.
நமது விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dmk udhay wish asia game 2026 medal winner vidhya ramraj