உயிருக்கு நிகரான நம் தாய்த் தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.. டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


தாய் தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து ஆயிரத்து 1938 - 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகளின் வீர வணக்க நாள் ஜனவரி 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளின் தினத்தை முன்னிட்டு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதில்,  உயிருக்கு நிகரான நம் தாய்த் தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த  தியாகிகளுக்கு வீரவணக்கம்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக்கவும் உழைத்திட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடலையும்‌ உயிரையும்‌ அன்னைத்‌ தமிழ்மொழிக்காக தியாகம்‌ செய்த அருபெரும்‌ தீரர்களான மொழிப்போர்‌ தியாகிகளுக்கு அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ இன்று 25.01.2022 (செவ்வாய்க்கிழமை) தமிழகம்‌ முழுவதும்‌ வீரவணக்கம்‌ செலுத்திடுவோம்‌. அன்றைய தினம்‌ ஊர்கள்தோறும்‌ மொழிப்போர்‌ தியாகிகளின்‌ திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கிடுவோம்‌.

அனைத்து கழக மாவட்டங்களிலும்‌ உள்ள மாணவர்‌ அணி நிர்வாகிகள்‌ அந்தந்த பகுதியிலுள்ள நிர்வாகிகளுடன்‌ இணைந்து இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச்‌ செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. புரட்சித்தலைவி அம்மா அவர்களின்‌ வழியில்‌ அன்னைத்‌ தமிழ்மொழியைக்‌ காத்து நின்றிடவும்‌ நம்‌ தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள்‌ அனைத்தையும்‌ பெற்றுத்தந்திடவும்‌ காலத்திற்கேற்ற வகையில்‌ தமிழின்‌ வளர்ச்சியை ஊக்குவித்திடவும்‌ பாடுபட மொழிப்போர்‌ தியாகிகளின்‌ வீரவணக்க நாளில்‌ உறுதியேற்றிடுவோம்‌.

இந்நிகழ்வுகள்‌ அனைத்திலும்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிடுமாறு கழக உடன்பிறப்புகள்‌ அன்போடு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv tweet for mozhipor thiyagikal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->