24 மணி நேரத்தில் நிலைமை தலைகீழா ஆகிடுச்சே - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


மின்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் “தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

“தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் அடித்துப் பேசிய 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டிருக்கிறது. 

மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் கோடைக்காலத்தை எப்படி நகர்த்துவது என்ற அச்சமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது. 

மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் தடைபட்டது என்று கூறி மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிட நினைக்காமல், மின்வெட்டு தொடராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinkaran Say About Power cut issue april


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->