சீமான் தலைமையில் மரங்களின் மாநாடு துவங்கியது...! எங்கு தெரியுமா?
Tree Conference began under leadership Seeman Do you know where
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் "மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம்" என்ற தலைப்பில் ''மரங்களின் மாநாடு'' நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அண்மையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சீமான்' மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.இதனிடையே, இன்று அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் மரங்களின் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நடிகர் விவேக், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதுமட்டுமின்றி, அவர்களின் நினைவாக மரக்கன்றுகளையும் அங்கு நட்டார்.மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டு மகிழ்ந்தார்.இதில் மாநாடு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு சிறப்பு பரிசாக புத்தகங்கள் கொடுத்து சீமான் பாராட்டினார்.
அத்துடன் மரங்கள் தொடர்பான கவிதை புத்தகங்களை சீமான் அந்த மாநாட்டில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மாநாட்டில் பேச ஆரம்பித்தார்.
English Summary
Tree Conference began under leadership Seeman Do you know where