தமிழக இடைக்கால பட்ஜெட்: டாப் 25 அறிவிப்புகள்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக சட்டப்பேரவையில் 11வது முறையாக  நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.

சற்றுமுன் தொடங்கிய சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றிவருகிறார். அதில், 

இடைக்கால பட்ஜெட் 2021-  தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறைக்கு நிதியுதவியாக உலக வங்கியிடம் இருந்து, 1,492 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. நீர்வள ஆதார திட்டங்களுக்கு ரூ.6,453 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே, சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் taxயை குறைக்க மத்திய கோரிக்கை.

சென்னை-குமரி தொழில் வழித்தட திட்டம் ரூ.6,448 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்காக தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் வடிவமைப்பு. சிறப்பு திட்டம் ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்.

ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும். திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

தலைவாசலில் அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவுக்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையை நவீனமயப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதுமாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இந்த 12,000 பேருந்துகளில் 2000 பேருந்துகள் மின்சார பேருந்துகள் ஆக இருக்கும். தமிழக அரசின் கடன் சுமை 5.60 லட்சம் கோடியாக கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 5000 கூடும்போது ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு. நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் 6683 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத் துறைக்கு 7 ஆயிரத்து 217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ஆயிரத்து 478 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

top 25 tn budget 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->