இறுதியில் சாத்தியமானது 'ஜோசப் விஜய் எனும் நான்'; 09 அமைச்சர்களும் நாளை பதவியேற்பு..!
Tomorrow the 9 ministers of the TVK will take their oaths of office
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 04 -ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், முதன் முதலில் அரசியல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலுக்கு பின்னர் வெளியான பெருபான்மையான கருத்து கணிப்புகளை முறியடித்து 108 இடங்களை தன் வசபடுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த தேர்தலில், தவெக 108, திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 பெற்றிபெற்றுள்ளன. ஆனாலும், தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை நிலை ஏற்பட்டது. 118 என்ற மேஜிக் இலக்கத்தை யாரும் பெரும்பான்மையுடன் பெறாத நிலையில், கூட்டணி ஆட்சிக்கு தவெக அழைப்பு விடுத்தது.
முதலாவதாக காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. அடுத்ததாக நேற்று 02 இடதுசாரி கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. ஆனாலும், பெரும்பான்மையை தொவதற்கு 02 தொகுதிகள் என்ற சிக்கல் நீடித்தது. அதன்படி, இன்று இந்திய முஸ்லீம் லீக், மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆதரவை கொடுத்துள்ள நிலையில் அதிபெறுமைமையான 118 இடங்களுக்கு மேல 120 இடங்களுடன் 04 வது முறையாக விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க உரிமை கோரியுள்ளார்.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இன்று ஆளுநரிடம் தங்கள் கட்சிக்கான ஆதரவு கடிதத்தை விஜய் ஆளுநரிடம் கொடுத்துள்ள நிலையில் அடுத்த முதல்வே யார் என்ற இழுபறிக்கு முடிவு கிடைத்துள்ளது. இதனையடுத்து, நாளை மதியம் 3.15 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் சார்பில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன், விஜய் முதல்வராக பதவியேற்கும் அதே நேரத்தில் 09 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன் உள்ளிட்டவர்கள் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Tomorrow the 9 ministers of the TVK will take their oaths of office