அமைச்சர் எ.வ வேலுவின் கல்லூரி ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அகற்றப்படும்! தமிழக அரசு உறுதி!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நச்சுப்பட்டு மற்றும் தென்மாத்தூர் இடையே அமைந்துள்ள பெரிய ஏரிக்கு செல்லும் பாசன கால்வாயை ஆக்கிரமித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு நிறுவனத் தலைவராக இருக்கும் அருணை பொறியியல் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உமா மகேஸ்வரி ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கையான நீர் வழித்தடம் மாறி உள்ளது. கல்லூரியின் கழிவுநீர் கால்வாயில் திறக்கப்படுவதால் நீர் நிலைகள மாசடைவதாகவும், நீர்நிலைகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை என வாதிட்டார்.

அதேபோன்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார் மனுதாரர் அறநிலையத்துறைக்கு சொந்தமான 25,000 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து இருந்தார். அவரிடம் இருந்த சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் மீது ஏற்கனவே 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

அதேபோன்று தாசில்தார் தலைமையான குழுவினர் ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நிலங்கள் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அரசு தரப்பு உறுதி அளித்தது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கினை முடித்து வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNgovt assured evVelu College land occupation will be remove


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->