#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு! 
                                    
                                    
                                   tn governot write letter to mk stalin 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, இடஒதுக்கீடு சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரையில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்த போவதில்லை தமிழக முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். 
மேலும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநரை சந்தித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்  படிப்பில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தினர்.
 
இந்த நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த வாரம் தமிழக ஆளுநருக்கு கடிதம் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்  படிப்பில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினார்.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக ஆளுநர் முக ஸ்டாலினுக்கு பதில் கடிதம்எழுதியுள்ளார். அதில், இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அனைத்து நிலைகளிலும் ஆலோசனை எனத் தகவல் தெரிவித்துள்ளார். இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை என்றும், கால அவகாசம் தேவை என்பதை தன்னை சந்தித்த அமைச்சர்களிடமும் விளக்கினேன் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       tn governot write letter to mk stalin