தேர்தல் முடிவுகள்: அதிமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை!
TN Election Results RB Udhayakumar Confident of AIADMK-Led Alliance Absolute Majority
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முக்கியக் கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் நாளை (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த மிக முக்கியமான தருணத்தில், தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாளை தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நற்செய்தி வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் வேட்பாளர்கள் குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்துரைத்தார். களத்தில் நின்ற முதலமைச்சர் வேட்பாளர்களிலேயே முதன்மையானவராகவும், மக்களால் அதிகம் விரும்பப்பட்டவராகவும் எடப்பாடி பழனிசாமி திகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். அவர் ஒரு சாமானியராக, மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றியவர் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும் அவரை மனதார வரவேற்கத் தயாராக உள்ளனர் என்றும் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.
English Summary
TN Election Results RB Udhayakumar Confident of AIADMK-Led Alliance Absolute Majority