அதிமுக தான்... திமுக கூட்டணியும் முடிந்தது... இனி பாஜக தான் தமிழகத்தில்... பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், "நடந்துவிட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகம் என்று நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள் அதற்கான காரணங்களை சொல்கிறேன் 

இந்தத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வென்று பாஜக பெரும் தோல்வியை சந்தித்து இருப்பது உண்மைதான் தேர்தலில் தோற்று இருக்கிறோம் ஆனால் அரசியலில் வென்றிருக்கிறோம் 

இதுவரையும் இந்தி கூட்டணி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸின் துரோகத்தால்  இல்லாமல் போய்விட்டது 

கம்யூனிஸ்டுகளும் விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசின் துரோகத்திற்கு துணை சென்றிருக்கிறார்கள்...

துரோகத்தின் வலி என்ன என்பது திமுகவிற்கு புரிந்து இருக்கும் பாஜக நமக்கு எதிரி தான் ஆனால் ஒருபோதும் துரோகம் செய்ததில்லை என்கிற வரலாறு திமுகவின் நினைவிற்கு வந்தே தீரும்...

இனிமேல் திமுகவால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி நாயனத்திற்கு தவில் அடிக்க முடியாது....

பாராளுமன்ற செயல்பாடுகளில்  முன்பு போல காங்கிரசின் நிலை எடுத்து திமுகவால் செயல்பட இயலாது....

விஜய் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் சென்று விட்ட நிலையில் இருக்கின்ற ஒரு சில கட்சிகளை வைத்துக்கொண்டு திமுக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது....

அதிமுகவைப் பொறுத்தவரை மிகப் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது 10 சதவீத இடங்களுக்கும் மேலாக டெபாசிட் இழந்திருக்கிறது அதிமுக...

எடப்பாடியாரால் இனி அதிமுகவை கட்டி காப்பதே மிகப் பெரும் சவாலாக இருக்கும்...

தொடர்ந்து நான்கு பொதுத் தேர்தல்களில் வீழ்ச்சியுற்ற கட்சியாக மிகப் பெரும் மனச்சோர்வில் இருக்கிறது அதிமுக....

அதை மீட்டெடுக்கும் மனவலிமையும் தலைமையும் எடப்பாடியாருக்கு இருக்கிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

இப்போது தமிழக பாஜகவிற்கு களமும் காலமும் உருவாகி இருக்கிறது....

திராவிடக் கட்சிகள் சோர்வடைந்து இருக்கும் இந்த நிலையில் ....

ஆட்சி அதிகாரத்தில் அனுபவம் இல்லாத விஜய் கட்சி அரசமைத்திருக்கும் இத் தருணத்தில் மிகச் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது 

இந்தியப் பேரரசின் பிரதமராக வலிமைமிக்க தலைவர் நரேந்திர மோடி இருக்கிறார் அரசியல் சாணக்கியராக அமித்ஷா அவர்கள் இருக்கிறார்....

தமிழகத் தாமரைத் தொண்டர்களின் எழுச்சியும் வீரியமும் இந்த மாநிலத்தில் புதியதொரு அரசியலுக்கு வழிவகுக்கும்....

தமிழக பாஜக ஒரு வித்தியாசமான கலவை 

மற்ற கட்சிகளைப் போல மூத்தவர்கள் மட்டுமே இல்லாமல் செயல் துடிப்பு மிக்க இளைஞர்களையும் தலைவர்களாக கொண்ட கட்சி பாஜக...

வரும் காலத்தில்  அத்தகைய இளமையும் நீண்ட கால அனுபவமும் கூட்டாகச் சேர்ந்த தலைமை தமிழக பாஜகவிற்கு உத்வேகம் தரும்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN election 2026 Advantage to BJP


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->