மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்.. காங்கிரஸ் எம்எல்ஏ போர்க்கொடி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தனி பெரும்பான்மையுடன் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி.கே சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகாவில் நடைபெற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கூடிய விரைவில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக துணை முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துறைமுருகன் கர்நாடக முதலமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை "மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை நாங்கள் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் நலனே எங்களுக்கு முக்கியம். மேகதாது அணை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் தேசிய தலைமை வலியுறுத்தும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலின் பொழுது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என உறுதி அளித்து இருந்தது தெரிந்தும் திமுக நிர்வாகிகள் காங்கிரசுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று பிரச்சாரம் செய்தனர். அதேபோன்று பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிலையில் பதவியேற்று சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு இருப்பதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Congress assured we not allowed Karnataka built dam in Meghadatu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->