#BigBreaking || விளக்கம் கேட்ட மருத்துவர் இராமதாஸ்.! சற்றுமுன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் முக ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம்; அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன; முதலமைச்சர் இத்திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து இருந்தார்.

தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானவை. நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடக்காமல் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படுவதை  மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். எந்தத் திட்டப்பணிகளும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது. 

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM LETEER TO CENTRAL MINISTER FOR TN NH Road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->