#BigBreaking | திமுகவை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து விசிக, கம்னியூஸ்ட் வெளிநடப்பு!
TN Assembly VCK CPIM CPI out
கடந்த 12.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்டத்தில் பிரிவு 65 ஏ திருத்தமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தமானது தனியார் நிறுவனங்கள், தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு முறை அறிவிக்கப்பட்ட நிலையில், எட்டு மணி நேர வேலையை பன்னிரண்டு மணி நேரமாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், தொழிலாளர்களுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, இன்று மீன்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இருந்த போதிலும் சற்றுமுன் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 65 ஏ திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.

இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையிலிருந்து, இந்திய கம்னியூஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தன. அதே சமயத்தில் காங்கிரஸ், மதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TN Assembly VCK CPIM CPI out