தேர்தல் 2026: 50 தொகுதிகளை கேட்கும் பாஜக! சென்னையில் 'மெகா' பட்டியல்... அதிர்ச்சியில் அதிமுக..!
TN Assembly Election ADMK BJP alliance
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தாங்கள் போட்டியிட விரும்பும் 50 தொகுதிகள் கொண்ட பட்டியலைத் தயாராக வைத்துள்ளது. வரும் நாட்களில் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும்போது, இந்தப் பட்டியல் அதிமுக தலைமையிடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளில் குறிப்பிட்ட சட்டமன்றப் பிரிவுகளில் பாஜக 20% முதல் 40% வரை வாக்குகள் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குறிவைக்கப்படும் முக்கிய இடங்கள்:
சென்னை முதல் குமரி வரை அடையாளம் காணப்பட்டுள்ள முக்கியத் தொகுதிகள் விவரம்:
சென்னை: எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம்.
கொங்கு மண்டலம்: கோவை (வடக்கு, தெற்கு), சிங்காநல்லூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் பகுதிகள்.
தென் தமிழகம்: கன்னியாகுமரியின் 6 தொகுதிகள், நெல்லை (பாளையங்கோட்டை, நாங்குநேரி), தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி. பிற பகுதிகள்: வேலூர், ஓசூர், தர்மபுரி.
அமித் ஷாவின் வியூகம்:
மொத்தமாக அதிமுகவிடம் 70 தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, அதில் 50 இடங்களில் நேரடியாகக் களமிறங்கவும், மீதமுள்ள 20 இடங்களைச் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதே அமித் ஷாவின் வியூகம்.
டிசம்பர் 15 முதல் அதிமுக விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கவுள்ள நிலையில், பாஜகவின் இந்தத் 'திரி' பட்டியல் தகவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TN Assembly Election ADMK BJP alliance