மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி; மெஸ்ஸி அணியை வீழ்த்திய RR 9..!
Telangana Chief Minister Revanth Reddy played football with Messi
ஐதராபாத்தில் நடந்த காட்சிப் போட்டியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்று விளையாடினர்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். தனது 'கோட் இந்தியா டூர் 2025'-இன் மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்று வந்த அவர், தற்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளார். இன்று மாலை ஐதராபாத் வந்த மெஸ்ஸி, அங்கு . அவரை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வரவேற்றார். பின்னர், அவர் ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அணிக்கு எதிரான 07 வெர்சஸ் 07 கண்காட்சிப் போட்டியில் பங்கேற்று கால்பந்து விளையாடினார்.
இந்த கண்காட்சிப் போட்டியின் போது மெஸ்ஸி மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் கோல் அடித்து அசத்தினர். ரேவந்த் ரெட்டியின் ஆர் ஆர் 09 அணி, மெஸ்ஸியின் அபர்ணா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் மைதானத்தில் இருந்த மெஸ்ஸி, அங்குள்ள குழந்தைகளுடனும் ரசிகர்களுடனும் கலந்துரையாடினார். கோல்கட்டாவில் மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு, ஐதராபாத் நிகழ்வு சிறப்பாகவும், கட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் மெஸ்ஸியை சந்தித்த ராகுல்காந்தி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோருடன் கைகுலுக்கி உரையாடினார்.
English Summary
Telangana Chief Minister Revanth Reddy played football with Messi