மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் ISI-யால் உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு..! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், மத்திய வேளாண் அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது, உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவராஜ் சிங் சவுகான், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை காரணமாக போபாலில் உள்ள சிவராஜ் சிங் சவுகான் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாதுகாப்புக்கும் கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Security has been increased for Union Minister Shivraj Singh Chouhan due to a threat to his life from Pakistans ISI


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->