வதந்திக்கு முற்றுப்புள்ளி! ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா?..கோபமாக பேசிய அபிஷேக் பச்சன்..! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டை கடந்தும் இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜோடி — ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன். 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர்கள், மகள் ஆராத்யாவுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக “இருவருக்கும் பிரச்னை… விவாகரத்து நெருங்குகிறது” என்ற வதந்திகள் தீவிரமாக பரவி வந்தன.

ஐஸ்வர்யா ராய் கரியரின் உச்சத்தில் இருந்தபோது சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோருடனான உறவுகள் முறிந்த பின், அபிஷேகுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்ப பின்னணி, நடிப்பு புகழ் ஆகியவற்றால் பாலிவுட்டின் கவனத்தை எப்போதும் ஈர்த்த இந்த ஜோடியைச் சுற்றி ஊடக செய்திகள் என்றும் அதிகம்.

சமீபமாக, ஐஸ்வர்யா மகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டில் வசிக்கிறார்… ஜெயா பச்சனுடன் கருத்து வேறுபாடு காரணம்… என பல வதந்திகள் ஓடியன. ஜெயா பச்சன் மறுப்பு தெரிவித்தாலும், பேச்சுக்கள் ஓயவில்லை.

இதற்கிடையே, அபிஷேக் பச்சன் தானாகவே ஒரு பேட்டியில் இந்த வதந்திக்கு முழு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அபிஷேக் கூறியதாவது:“எங்களைப் பற்றிய விவாகரத்து செய்திகள் முற்றிலும் பொய். ரப்பிஷ்!நாங்கள் காதலித்தபோதும் எப்போது திருமணம் நடக்கும் என்று பேசினார்கள்.இப்போது விவாகரத்து பற்றி பேசுகிறார்கள். இதெல்லாம் குப்பை.எனக்கு ஐஸ்வர்யா பற்றி நன்றாக தெரியும், அவளுக்குப் பற்றி எனக்கும் தெரியும்.நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் — அதுதான் முக்கியம்.எங்கள் குடும்பத்தைப் பற்றி யாராவது பொய் செய்தி எழுதினால், நான் சும்மா இருக்க மாட்டேன்.இந்த வதந்தி இத்துடன் முடிந்தது!”

அவரது இந்த நேரடி பதிலால், பல மாதங்களாக தொடர்ந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களும், பாலிவுட் வட்டாரமும் இப்போது நிம்மதியாக இந்த வதந்தி நிற்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An end to rumors Divorce with Aishwarya Rai Abhishek Bachchan spoke angrily


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->