பாகிஸ்தான் ஐஎஸ்ஐ- உடன் தொடர்பு; ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை கைது செய்துள்ள அசாம் போலீசார்..!
Assam police have arrested a retired air force officer linked to Pakistans ISI
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ- உடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேஜ்பூரில் உள்ள பாட்டியா பகுதியைச் சேர்ந்த குலேந்திர சர்மா என்பவரை நேற்று இரவு கைது அசாம் போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குலேந்திர சர்மா கடந்த 2002 இல் விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அத்துடன், முன்னதாக தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் சிறிது காலமாக குலேந்திர சர்மாவை கண்காணித்து வந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இவர், பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
அத்துடன், அவரது மொபைல் போன் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் சில சந்தேகத்திற்கிடமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குலேந்திர சர்மா சில தரவுகளை நீக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணை முடிந்த பின்னரே உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று சோனித்பூர் டிஎஸ்பி ஹரிசரண் பூமிஜ் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Assam police have arrested a retired air force officer linked to Pakistans ISI