தனுஷ் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர்...? - மௌனம் உடைத்த மிருணாள் தாகூர் - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷுடன் தொடர்புபடுத்தப்பட்ட கிசுகிசுக்கள் ஓய்வதற்குள், தற்போது கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யருடன் நடிகை மிருணாள் தாகூரின் பெயர் மீண்டும் கிசுகிசு வட்டாரங்களில் அடிக்கடி உலா வர தொடங்கியுள்ளது.

இருவரும் அடிக்கடி ‘டேட்டிங்’ செல்வதாகவும், பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் ரகசிய சந்திப்புகளில் ஈடுபடுவதாகவும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த நிலையில், தன்னைச் சுற்றி பரவும் சமூக ஊடக கிசுகிசுக்கள் குறித்து மிருணாள் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அமைதியான ஆனால் தைரியமான பதிலை அளித்தார்.“பிரபலங்களாக இருப்பவர்கள் என்றால் விமர்சனங்களும் வதந்திகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும்.

ஆரம்ப காலங்களில் அவை எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது ‘இதுவா?’ என்று எளிதாக கடந்து செல்ல கற்றுக்கொண்டேன். தேவையற்ற விமர்சனங்களை நான் கவனிக்கவே மாட்டேன்.

எந்த வதந்தியும் என் மனநிலையையோ, என் வாழ்க்கையையோ பாதிக்காது” என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush or Shreyas Iyer Mrunal Thakur breaks her silence


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->